அனைத்து வாகனங்களுக்கும்  வீதித் தகுதிச் சான்றிதழை அவசியம்!

Monday, November 10th, 2025


…..
நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் ‘வீதித் தகுதிச் சான்றிதழை’ (Road Worthiness Certificate) கட்டாயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இதழொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் என்றும், இது இல்லாத வாகனங்கள் ஓட அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வர்த்தக வாகனங்களுக்குக் கட்டாயமாக உள்ள ‘தகுதிச் சான்றிதழை’, தற்போதுள்ள ‘புகைச் சான்றிதழுடன்’ ஒருங்கிணைத்து, அனைத்து வாகனங்களுக்கும் ஒரே இடத்தில் இருந்து ‘வீதி தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது விரிவான திட்டம் என்பதால், இதன் ஆரம்பகட்டப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
000

Related posts: