அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் – 30 ஆயிரம் தண்டத்துடன் தளத்தை அகற்ற பிரதேச சபைக்கும் நீதிமன்று அனுமதி!
Thursday, May 14th, 2026யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு 30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையத்தின் மூன்றாம் தளம் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையால் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் அடிப்படையில், அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்றாம் தளத்தை பிரதேச சபை அகற்ற அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதற்கான செலவுகளை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கட்டட உரிமையாளருக்கு 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
Related posts:
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்!
இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
பெண்டோரா பேப்பர்ஸிலுள்ள இலங்கையர்கள் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!
|
|
|


