அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு!
Saturday, October 19th, 2024
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் வெளியான பல செய்திளில், எரிபொருள் என்ற வார்த்தையின் தவறான விளக்கத்தை தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை மூன்று வகையான பெற்றோலிய எரிபொருளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கடந்த நிர்வாகத்தின் கீழும் கூட மின் உற்பத்திக்கான போட்டி ஏலத்தின் மூலம் டீசலை கொள்வனவு செய்யவில்லை.
மின் உற்பத்திக்கு திறம்பட டீசல் வாங்குவதற்கு எதிராக புதிய நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அறிக்கையில் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டுப் பூர்த்தி – மத்திய வங்கியால் 1000 ரூபாய் நாணயம் வெளியீடு!
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் - இலங்கை மின்சார சபையின் தலை...
இந்திய உதவியால் இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது - இந்திய வெளிவிவகார அமைச்...
|
|
|


