அனலைதீவுஐயனார்கோவிலில்திருடப்பட்டபித்தளைகலசங்கள்ஊர்காவற்துறைபொலிஸாரால்மீட்பு!
Monday, June 2nd, 2025
அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 06 பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் 06 கலசங்களையும் மீட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் - பரீட்சை ஆணையாளர் நாயகம்!
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்ப...
கஞ்சா கடத்தலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கை - யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அத...
|
|
|


