“வட்டுக்கோட்டைக்கு 50” மே 30 அன்று தந்தை செல்வாவில் !

Wednesday, April 8th, 2026


………….
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில் –

1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்டதே
வட்டுக்கோட்டை தீர்மானமாகும்.

அதன்படி இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம், தீர்மானத்தின் அரசியல், சட்ட மற்றும் தமிழ் இனத்தின் இறைமையின் பரிமாணங்களும் ஆராயப்படுவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: