ரணிலைச் சந்தித்து வந்த வஜிர அபேவர்தன வெளிநாட்டுத் தூதுவர்களுடன் அவசர இரகசிய சந்திப்பு!

Monday, April 6th, 2026

ஐக்கியத் தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இலங்கையிலுள்ள பலம் பொருந்திய நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை இரகசியமாகச் சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புகள் அனைத்தும் உத்தியோகப்பூர்மாக பகிரப்படுத்தப்படாமல் மேற்கொண்டுள்ளமையானது விசேட அவதானங்களைத் திருப்பச் செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும், முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்ஹவை சிங்கப்பூரில் வைத்துச் சந்தித்த பின்னரே  வஜிர அபேவர்தன இலங்கைக்கு வந்து குறித்த தூதுவர்களைச் சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த அவதானத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுகம் பெற்று இலங்கைக்கு வருமுன்னர் நிகழ்ந்துள்ள இச் சந்திப்புகளின் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: