நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தின் எதிரொலி – வாழ்வுக்காக சொத்துக்களை விற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
Wednesday, April 8th, 2026நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓள்வூதியம் இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மிகவும் கடினமான நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிய வருகிறது.
இதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் வரையில் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்காக தமது காணிகள் உட்பட்ட சொத்துக்களை விற்பதற்கு திட்டமிட்டு வருவதாவும், இவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமசிறி மானகே மற்றும் எஸ்.கே. சுபசிங்ஹ ஆகியோரும் அடங்குவதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரேமசிறி மானகே, ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினை காரணமாக தமது குடும்பத்தாருக்குச் சொந்தமான திருகோணமலையிலுள்ள காணியை விற்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே நிலைமைகளிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|
|


