வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை – பலத்த பாதுகாப்பில் நாடாளுமன்ற வளாகம்!

நாடாளுமன்றம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் CCTV கமராக்களும் அதிகம் பொருத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஸ்கேனர்கள், பாதுகாப்பு சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று(06) கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.பி.எல்: பஞ்சாபிடம் வீழ்ந்தது சென்னை!
ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!
பொதுவான சட்டத்தின் கீழ் இன வேறுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!
|
|