முறையற்ற விதத்தில் அழைப்பாணை விடுத்த மருதங்கேணி பொலிஸார்!

மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற தகராறு ஒன்றிற்காக முறையற்ற விதத்தில் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மருதங்கேணி பகுதியில் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பதற்காக பொலிஸார் தம்முடன் நெருக்கமானவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அழைப்பாணை விடுக்கப்பட்ட பெண், அந்த நேரத்தில் பொலிஸ் நிலையம் செல்வதற்கு பயந்து தந்தையாரை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி அழைப்பு விடுக்கப்பட்டமைக்கான காரணத்தை கேட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்தான் வரவேண்டும் எனக்கூறி அழைப்பாணை விடுக்கப்பட்மை குறித்து எதுவும் தெரிவிக்க முடியாதெனவும் உடனடியாக சம்பந்தப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் தொவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸார் முறையற்ற விதத்தில் அழைப்பாணை விடுக்கப்பட்டமை, எந்த நேரத்திலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பது போன்றவை குறித்து கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் பிரதேச செயலகத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
Related posts:
போதைப்பொருள் பாவனையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி!
2018 - வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் - தேர்தல்கள் ஆணைக்கு...
முதன்முறையாக வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர...
|
|