முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

Friday, August 22nd, 2025


…..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி இலண்டனுக்குச் சென்றது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியிருந்தது.

இது தொடர்பான ஆதாரங்களை ஜூன் 24 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதைத் தொடர்ந்து, விசாரணை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதன்படி, விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சுமார் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

Related posts: