போதைப்பொருள் பாவனையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி!

போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தல் பற்றிய சட்ட வரைவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதனை துரிதப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை சட்டமா அதிபர் திணைக்களம், இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் காவற்துறை திணைக்களம் ஆகியவற்றை ஒன்றிணைத்து நீதி அமைச்சின் தலைமையில் தயாரிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மதுவரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்தல் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இதற்கான உரிய திருத்தங்களை நிதியமைச்சின் ஊடாக விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
|
|