பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – கனடா பிரதமர் அதிரடி!

Tuesday, June 11th, 2019

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தடை 2021 ஆம் ஆண்டு முதல் அமுலுக்குவரும் என கூறப்படுகிறது. ஸ்ட்ரா, பைகள், உணவு உண்ண பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முட்கரண்டி, மற்றும் கரண்டி உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளை குறைக்கவும், உலகின் கடல்களை பாதுகாக்கவும் இந்த நடடிவக்கை முன்னெடுக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின்ட் ரூடோ தெரிவித்துள்ளார்.

உலகில் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள நிலையில் ஜஸ்டின்ட் ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்ய முடிவு செய்துள்ள பொருட்களின் பட்டியலை கனடா அரசாங்கம் உதாரணமாக எடுத்துக்கொள்ளும். அதேசமயம், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் உட்பட, பிரத்தியேக விவரங்களைத் தீர்மானிப்பது என ஒரு செயல்முறை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: