பிரேசிலை உலுக்கும் கொரோனா – 32 இலட்சத்தை நெருங்கும் நோயாளர்கள்!

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.70 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 1,160-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
Related posts:
கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை: மூவருக்கு 15 வருட சிறை!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஆரம்பம்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி!
|
|