தொடர் மழை – வவுனியாவில் 3,000 ஏக்கர் வரையான பயிர்ச் செய்கை அழிவு – பெரும் துயரில் விவசாயிகள்!

Saturday, January 16th, 2021

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆயிரத்து 808 ஏக்கர் நெற்பயிர்ச் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆயிரத்து 81 ஏக்கர் உழுந்துப் பயிர்செய்கையும் அழிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று சனிக்கிழமை அவர் தெரிவிக்கையில், “வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், 97 குளங்களின் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த ஆயிரத்து 808 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளது.

அதேபோல். ஆயிரத்து 81 ஏக்கர் உழுந்துப் பயிர்செய்கையும் அழிவடைந்துள்ளது. இதேவேளை, குறித்த பயிர்களுக்கான காப்புறுதியை செய்திருப்பவர்களுக்க காப்புறுதித் தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியாவில் அனைத்து குளங்களும் வான் பாய்ந்து வருகின்றநிலையில் கனமழை நீடிக்கும் பட்சத்தில் மேலும் பயிர்கள் அழிவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts: