தற்கொலைப்படை தாக்குதல் – 10 பேர் பலி
Wednesday, July 20th, 2016
யெமன் நாட்டின் ஏடென் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான முகல்லாவில் அல்-புரும் மற்றும் அல்-கபர் நகரங்களில் வாகன போக்குவரத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மீது மேற்கொண்ட கார்குண்டு தாக்குதலில் 10 பேரிற்கும் அதிகமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு யெமனில் இயங்கிவரும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
பால்மா இறக்குமதியை நிறுத்த பால்மா கம்பனிகள் தீர்மானம்!
இலங்கை குழாமில் சுரங்க லக்மால்!
பொதுவான சட்டத்தின் கீழ் இன வேறுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!
|
|
|


