தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை!

பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தடை ஏற்படாத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நேர்முகப் பரீட்சையை பூர்த்தி செய்வது அவசியமாகும் என்றும அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 30ஆம் திகதிக்குள் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் தற்காலிய பெயர்ப் பட்டியலை காட்சிப்படுத்துவதும் அவசியமாகும்.
அடுத்த மாதம் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை எதிர்ப்புக்களையும், மேன் முறையீடுகளையும் சமர்ப்பிக்க முடியும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே சந்த...
நுகர்வோர் நலன் கருதி அதிகார சபை விசேட நடவடிக்கை!
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்!
|
|