செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற தோழமைகளின் பொங்கல் நிகழ்வு!
Tuesday, January 14th, 2025
……
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் பொங்கல் நிகழ்வுகள் இன்று கட்சியின் யழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மிக விமரிசையாக இடம் பெற்றது.
2025 ஆம் அண்டின் உழவர் திருநாளான சூரியப் பொங்கல் தினம் இன்றாகும்.
இப்பண்டிகையை மக்கள் தத்தமது இல்லங்களிலும் தமது தொழில் இடங்கள் ஆலயங்கள் என பல்வேறு இடங்களில் பொங்கல் பொங்கி படைத்து சூரியனுக்கு நன்றி. செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தைப்பொங்கல் நிகழ்வுகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் கட்சியின் தோழர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்களது பிரசன்னத்துடன்
மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
குறிப்பாக இந்த நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் சூரிய பகவானுக்கு அமுதளித்த தித்திக்கும் பொங்கல் உணவுகளை உண்டு மகிழ்ந்திருந்தமை குதிப்பிடத்தக்கது.
இதனிடையே பொங்கல் நிகழ்வின் விசேட நிகழ்வாக சாதனையாளர் செல்லையா திருச்செல்வத்தின்
2000 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனத்தை தனது இரு காதுகளில் கட்டி 50 மீற்றர் தூரம் இழுத்த நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


