எரிமலை வெடித்து 82 வீடுகள் இறுகிப்போயின!

ஹவாய்த் தீவில் கிலோவா எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பு வழிந்தோடியதில் 82 வீடுகள் எரிந்து பாறையாக இறுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலோவா எரிமலை உள்ளது. 1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. அந்த கிலோவா எரிமலை கடந்த ஒரு மாதமாக வெடித்து பாறைக் குழம்பைக் கக்கி வருகிறது.
நேற்று பாறை குழம்பை கக்கியதில் அப்பகுதியில் உள்ள 82 வீடுகளை எரித்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு ஏதுமில்லை. ஹவாய்த் தீவில் எரிமலை வெடித்த பகுதிகளில் இருந்து நாலாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Related posts:
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான காணி குத்தகை வரி அடுத்த ஆண்டு முதல் ...
வடக்கு மாகாணத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் நாளையதினம் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல ...
'கிராமத்துடன் உரையாடல்' - எதிர்வரும் ஞயிரன்று யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!
|
|