இலங்கையைச் சேரந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில்?

Friday, November 18th, 2016

இலங்கையிலிருந்து 32 பேர், சிரியாவில் மேலோங்கியுள்ள ஐ.எஸ். போராட்டக் குழுவோடு தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர் என, புத்தசாசனம் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ இன்று (18) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று (18) அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதில் 4 குடும்பங்கள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

isis

Related posts: