இம்மாத இறுதியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் !
Saturday, August 15th, 2020
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் எதிர்வரும் 31ம் திகதி முதல் செப்டம்பர் 13ம் திகதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியில் விளையாடப் போவதாக உலகின் முதல் தர வீரரும், 3 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) நேற்று அறிவித்தார்.
‘பல்வேறு இடையூறுகளும், சவால்களும் நிறைந்து இருக்கும் இந்த சமயத்தில் இத்தகைய முடிவை எடுத்தது எளிதான விஷயம் அல்ல. மீண்டும் களம் காண இருப்பது உற்சாகத்தை அளிக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார். ஜோகோவிச், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனவிடுதலைக்காக ஏங்கும் மக்களது வையகத்துத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அ...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி!
2018 - வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் - தேர்தல்கள் ஆணைக்கு...
|
|
|


