செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!

“கொடியவர்கள் இழைக்கும் தீங்கிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மௌனமாகச் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே இந்தத் தலைமுறையில் நாம் வருந்த வேண்டும்.” என்றார் மார்டின் லூதர் கிங், கடந்த 28ம் திகதி வியாழக்கிழமை இரவு ஊடகவியலாளரான திரு.டி.சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஈழமக்கள் ஜனநாயக கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆனால், இந்தக் கொலையை மட்டுமல்ல, தமிழ் மக்களின் விடுதலையின் பெயரால் நடந்த, நடந்து வருகின்ற எதிர்காலத்தில் நடத்தப்படத் திட்டமிடுகின்ற படுகொலைகளையும் கண்டிப்பதற்கு எமக்கு நெஞ்சில் உரம் இருக்கின்றது. ஏனெனில், நாம் எந்தப் படுகொலையையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஒரு கொலையைக் கண்டித்து, மற்றொரு கொலையை ஆதரிப்பவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஜனநாயக உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக கொலைக் கலாசாரமற்ற கருத்துச் சுதந்திரத்தை தமிழர் அரசியலில் நிலைநாட்ட வேண்டுமென்பதற்காக தமிழ் மக்களின் மனசாட்சியின் குரலாக நாம் செயற்பட்டு வருகின்றோம். எங்களால் எந்தப் படுகொலையையும் ஆதரிக்க முடியாது. ஆனால் இன்று இந்தச் சபையில் ஊடகவியலாளர் முலாம் பூசப்பட்ட அரசியல்வாதி சிவராமின் படுகொலைக்கு விவாதம் வேண்டுமெனக் கேட்டவர்கள், புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு ஏன் குஞ்சம் கட்டி அழகு பார்க்கின்றார்கள் எனக் கேட்கின்றேன்.

ஆனால் சிவராமைப் படுகொலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அக்கொலையாளிகள் மட்டுமல்ல தங்களைப் பற்றிய உண்மைகள்  “முறிந்த பனை” என்னும் புத்தகத்தினூடாக வெளிவருவதைத் தடுக்கும் நோக்கத்தோடு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியை ரஜனி திரணகவைக்  கொன்றவர்களும் தனது கவிதைகளில் தனது கட்டுரைகளில் தனது பேச்சுக்களில் புலிகளை விமர்சிக்கின்றார் என்பதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவியான எழுத்தாளர் கலைஞர் செவ்வியைக் கொன்றவர்களும் தொழிலாளர் வர்க்கத்தினருக்காகப் போராடிய தோழர்களான அண்ணாமலை விஜயானந்தன் போன்றவர்களைக் கொன்றவர்களும் எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி. யைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்களான தினமுரசு ரமேஷ் – நடராசா அவர்கள் அற்புதராசா “மக்கள் குரல்”  சின்ன பாலா எனப்படும் பால நடராஜா ஐயர் போன்றவர்களைக் கொன்றவர்களும் சட்டத்தின் முன் நிறத்தப்பட வேண்டும்.(இடையீடு)

நீங்கள் கதைக்கும் போது நானும் கேள்வி எழுப்பியிருக்கலாம். எனக்கும் உங்களுடைய பேச்சுக்கள் சம்பந்தமாக பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. சந்தேகங்கள் இருக்கின்றன.(இடையீடு) அத்தோடு தங்களது செயல்களையும் திட்டங்களையும் படைத்தரப்பினருக்குத் தெரிவிக்கின்றார் என்பதற்காக இரட்டை முகவரான நிமலராஜனைக் கொன்றவர்கள் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார் என்பதற்காக ஊடகவியலாளர் செழியன் பேரின்பநாயகத்தைக் கொன்றவர்கள் தினமுரசு நிருபரான கமலதாசனைக் கொன்றவர்கள் பிரான்சில் வாழ்ந்து வந்த மனித உரிமைவாதியான சபாலிங்கத்தைக் கொன்றவர்கள் ஆகிய அனைவரும் சட்டத்தில் நிறத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுவே எமது தெளிவான நிலைப்பாடாகும்.

இத்தகைய கொலைகளுக்கு எதிராக நீங்கள் ஏன் பேசுவதில்லை? தங்களது கொள்கையினை ஏற்றுக்கொண்டு தங்களோடு நின்றவர்களையே கொன்றழித்துவிட்டு அதற்கான பழியை அடுத்தவர் மீது சுமத்துவதுதான் அவர்களது வரலாறு. “குளத்தில் வாழும் விலாங்கு எல்லா மீன்களையும் விழுங்கிவிட்டு இனி விழுங்குவதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் தனது வாலைத் தானே தன்னையறியாமல் விழுங்கிக் கொள்வது போல” புலிகளின் கதையும் இப்போது ஆகிவிட்டது.

திரு.சிவராம் அவர்கள் 1982ம் ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழகப் படிப்பை இடைநிறுத்திவிட்டு தமிழ்ப் போராட்டத்துக்கு வந்தவர் பிரபாகரனினால் துரோகி எனக் குற்றம் சுமத்தப்பட்டு பாண்டி பஜாரில் வைத்துக் கொலை செய்ய முயற்றசிக்கப்பட்ட தோழர் உமா மகேஸ்வரனின் இயக்கத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் “புளொட்” இயக்கத்தினுள் ஜனநாய விரோதி எனவும் அவ்வியக்கத்தின் உட்கொலைகளோடும் மாற்று இயக்க உறுப்பினர்களின் கொலைகளிலும் சம்பந்தப்பட்டவர் எனவும் சக தோழர்களால் விமர்சிக்கப்பட்டவர். பின்னர் பிரபாகரனால் துரோகி எனத் தேடப்பட்ட வந்தவர். புலிகளின் கொலைக் கரத்திலிருந்து தப்பிப்பதற்கு மறைவிடங்களில் ஒழித்திருந்தவர். 1998ம் ஆண்டு வரை “புலிகளின் போராட்டம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்றது, தமிழர் போராட்டத்;தை திசை திருப்புகிறது” எனக் குற்றஞ்சாட்டி வந்தவர்.

பிரபாகரன் ஒரு கொடிய சர்வாதிகாரி என எழுதி வைத்தவர். புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்த போது கருணாவின் பிளவுக்கு சிவராம்தான் காரணமென அன்ரன் பாலசிங்கத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டவர். புலிகளால் கண்காணிக்கப்படுபவராகவும் பயன்படக்கூடியவராகவும் இருந்தவர். அன்று புலிகளுக்கு துரோகியாக இருந்த சிவராம் இன்று  புலிகளுக்கு மாமனிதரான வரலாறு சுவாரிசியமானது.(இடையீடு) அத்தகைய வழியில் வந்த பலர் இன்று இந்தச் சபையில் இருக்கின்றனர். (இடையீடு) இப்படியான ஒரு ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கின்றபடியால்தான் தமிழ் இனம் இன்றைக்கு நாசமாகி சீரழிந்து கொண்டிருக்கின்றது.(இடையீடு) ஆனபடியால் நீங்கள் உங்களுடையது தலைவர் சொன்னதைக் கேளுங்கள்! (இடையீடு) புலிகளை ஆதரித்தால்தான் -(இடையீடு)

உங்களுடைய தலைவரை நீங்கள் கேட்டு நடக்கவில்லையே! அதுதான் இன்றைக்குத் தமிழ் மக்களுடைய சாபக்கேடு.(இடையீடு) எதை? நாங்கள் சொல்வதைக் கேட்டிருந்தால் இன்னும் உச்சத்தில் இருந்திருப்பீர்கள்.(இடையீடு) உங்களைப் பற்றி எனக்குத் தெரியுந்தானே! உங்களுடைய வரலாறு, உங்களுடைய செயற்பாடுகள் உங்களுடைய அணுகுமுறைகள் எல்லாம் எனக்குத் தெரிந்தவைதானே!(இடையீடு)

நீங்கள் ஏன் வீணாக இந்த விவாதத்தை தடை பண்ணுகின்றீர்கள்? (இடையீடு) நீங்கள் பேசும்போது நான் பேசாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன். அதாவது உங்களுடைய கருத்துக்கள் சம்பந்தமாக எனக்கு மாறுபட்ட அபிப்பிரயம் இருந்தும் நான் அவற்றைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். (இடையீடு) அந்த ஜனநாயக நடை முiறையை நீங்களும் மதியுங்கள். இப்படி மதித்தால்தான் தமிழ்மக்கள் முன்னேறலாம். தமிழ் மக்களை அழிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

புலிகளை ஆதரித்தால்தான் தமிழ் மக்களிடையே வாழலாம் என்ற புலிகளின் கொலை வெறிக்கு அஞ்சி, கொண்டு கொள்கையையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் காப்பதற்கான அரசியல் போராட்;டத்தில் இருந்து எம்மை ஒருபோதும் ஒதுக்கிவிட முடியாது.புலிகள் கொலைகளைச் செய்துவிட்டு அந்தக் கொலைகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை மூடிமறைப்பதற்குத் திட்டமிட்டு நாடகமாடுபவர்கள் என்பதை முழு உலகமே அறியும். புலிகள் தாங்கள் செய்த கொலைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தக் கொலைகளின் பின்னால் புலிகள்தாம் செயற்பட்டார்கள் என்பதை பல்லாயிரக் கணக்கான மக்கள் அறிந்திருந்தும் அக்கொலைகள் பற்றிய விடயங்களை வேறு பக்கம் திசைதிருப்பிக் கொண்டிருப்பது அவர்களுக்குக் கைவந்த கலை. சில கொலைகளை காலத்தின் நெருக்கடி கருதி பின்னர் புலிகள் எற்றுக் கொள்வார்கள் அதனை ஒரு துன்பியல் நிகழ்வு எனக் கூறி சமாளித்த விடுவார்கள்.

தம்முடன் கூடவே இருந்த சுந்தரம் விக்ரர் மாத்தையா போன்ற பலரைப் படுகொலை செய்த வரலாறுதான் புலிகளினுடையது. 1990களில் இணக்கப்பாட்டிற்காகப் பேசுவோம். சில உதவிகள் தேவை ஐயா! எனக் கூறி தமிழ் மக்களின் தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைச் சந்திக்க வந்து குடித்த தேநீர் கோப்பைக்குள் குருதியை சொரிந்த புலிகளை நோக்கி தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தலைவனைக் கொன்ற புலிகளை நோக்கி இவர்களால் ஒரு கேள்வியைத் தானும் கேட்க முடியுமா என இச்சந்தர்ப்பத்தில் நான் அவாவுகின்றேன்.

தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தை இந்தப் புலிகள் கொன்ற போது அவரது எதிர்க்கட்சியின்; வழி வந்தவர்கள் ஏன் பாராளுமன்றில் விவாதம் நடாத்தவில்லை.? ஏன் ஓர் அஞ்சலிக் கூட்டத்தையாவது நடத்தவில்லை? தமிழ் மக்களின் மதிப்புக்குரிய தேசிய தலைவர் அமிர்தலிங்கத்துடன் ஒருமைப்பாடு தொடர்பாக உதவிகள் தொடர்பாகக் கதைக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு அவரது இருப்பிடம் தேடிச் சென்ற கதைத்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது அவரைக் கொன்றார்கள்.

அதேபோல் தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமார் பொன்னம்பலமும் கதைக்க வேண்டும். உதவி வேண்டும் எனக் கூறி அதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு வீட்டிற்கு வெளியே அவரது காரில் அழைத்துச் சென்று வெள்ளவத்தையில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.(இடையீடு) இது என்னுடைய கருத்து. நான் உண்மையைச் சொல்கின்றேன்.(இடையீடு)அப்படி என்றால் நீங்கள் பேசும் பொழுது நான் உங்களுடைய கருத்துக்கு மறுப்புச் சொல்ல முடியும்.(இடையீடு) இந்த ஜனநாயக மறுப்புத்தான் இன்றைக்கு மீண்டும் மீண்டும் தமிழ் சமுதாயத்தை மோசமான நிலைமைக்குத் தள்ளிக் கொண்டு போகின்றது.(இடையீடு)

ஆனபடியால் உங்களைப் போன்றவர்களால்தான் இன்றைக்குத் தமிழ் சமுதாயம் வேதனையடைந்து கொண்டிருக்கின்றது.(இடையீடு)

உங்களைப் போன்றவர்களால்தான் தமிழ் சமுதாயம் வேதனைக்குள்ளாகி யிருக்கின்றது.(இடையீடு)துரோகிகள் என,காட்டி கொடுப்பவர்கள் எனக் கூறி தமிழர்களைத் தமிழர்கள் கொல்லுகின்ற நிகழ்வு தினமும் வீடுகளிலும் வீதிகளிலும் அகதி முகாம்களிலும் நிகழ்ந்து வருகின்றது. இவ்வாறு கொல்லப்படும் தமிழ் இளைஞர்களிலும் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் கொலைகளை கண்டிப்பவர்கள் யார்? ஏன் இந்தத் தமிழ்க் கொலைகளை கண்டிப்பவர்கள் யார்? ஏன் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பினரால் இக் கொலைகளைக் கண்டிக்க முன்வரவில்லை? தோழர் பத்மநாபா, நண்பர் சிறீசபாரெட்ணம் போன்றவர்களை யார் கொன்றது இந்தப் புலிகள்தாம் இவை கொலைகள் இல்லையா? (இடையீடு)

உங்களுடைய கூற்றுக்கு என்னுடைய பதில் என்னவென்றால் அந்தக் கட்சித் தலைவர்மார் இருக்கிறார்கள் அவர்கள் அதற்குப் பதில் சொல்வார்கள் என்பதுதான் அதனை நான் சொல்ல வேண்டும் என்றில்லை. இப்போது அந்தக் கட்சித் தலைவர்மார் இருக்கிறார்கள்.அவர்களுக்குத் தெரியும் தங்களுடைய தலைவரை யார் கொன்றதென்று.(இடையீடு)

ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொல்வதற்கு வழி வகுத்த தமிழ்த் தலைவர்களைக் கொன்ற கோடிக்கணக்கான மக்களின் தiலைவரான பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைகாரனையும் அக்கொலைகளையும் ஆதரித்துக் கொண்டு எங்கள் சுயலாபங்களக்காக தமிழ் மக்;களின் மனசாட்சியைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்ற உங்களால் சிவராம் நினைவுகூரப்படுவதையிட்டு நாம் வெட்கித் தலைகுனிகின்றோம். சிவராம் பூதவுடலுக்கு …(இடையீடு)

அதுதான் பதில் சொல்லிவிட்டேனே (இடையீடு) மீண்டும் பதில் சொல்லட்டுமா?

உங்களுடைய கேள்விக்கு எனது உரையிலே பதில் சொல்லிவிட்டேன் (இடையீடு)அதுதான் யார் கொன்றதென்று முதலிலே சொல்லிவிட் டேனே!

சிவராமன் பூதவுடலுக்கு  – (இடையீடு) மாமனிதர் பட்டம் பெற விரும்புகிறார் போலிருக்கிறது.

நீங்கள் ஆறுதலாக கேட்டுக் கொண்டிருந்தால்தானே வாசிக்கலாம்.நீங்கள் குழப்பிக் கொண்டல்லவா இருக்கிறீர்கள்.

20 மே 2000

Related posts: