ஆஸி- இலங்கை : முதலாவது ஒருநாள் போட்டி நாளை!

இலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன.
இதில் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளதோடு டி20 போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.
இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் அணியுடன் போட்டியிடுவது சிறந்த வாய்ப்பாகும், அதேவேளை நாம் இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு ஆஸி அணியை வீழ்த்துவதற்கு தயாராகி வருருகின்றோம், அதுமாத்திரமின்றி புதிய வீரர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் அவர்களின் செயற்பாடு அணிக்கு வலு சேர்க்கும் என நம்புவதாக சாமரி அதபத்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான இலங்கை குழாமின் விபரம் இதோ…
1.சாமரி அதபத்து (அணித் தலைவர்
2.பிரசாதினி வீரகொடி (உபத் தலைவர்)
3.டிலானி மனோதர
4.நிபுனி ஹன்சிக
5.சாமரி பொல்கம்பொல
6.இசானி லொகுசூரிய
7.இனோகா ரணவீர
8.சுகந்திகா குமாரி
9.அசினி கலாசூரிய
10.இனோசி பெர்ணான்டோ
11.இமல்கா மெண்டிஸ்
12.அமா காஞ்சன
13.ஹர்சிதா மாதவி
14.உதேசிகா பிரபோதனி
Related posts:
|
|