மலேசியாவில் சாரணர்  மாவட்ட ஆணையாளர்களுக்கான பயிற்சி !

Tuesday, June 14th, 2016

இலங்கையை சேர்ந்த சாரண மாவட்ட ஆணையாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான பயிற்சிகளை, உலக சாரணர் சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை சாரணிய சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த பயிற்சி நெறி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் எதிர்வரும் 15-06-2016 முதல் 20-06-2016 வரை நடைபெறவுள்ளது.

இந்த செயலமர்வில் இலங்கை சாரணர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த 29 மாவட்ட ஆணையாளர்களும் 07 உதவி மாவட்ட ஆணையாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.

அந்த வகையில் வடமாகாணத்தில் இருந்து மாவட்ட ஆணையாளரும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபரும் ஆகிய திரு.கி.விக்கினராஜா, உதவி மாவட்ட ஆணையாளர்களாகிய திரு.ந.மதுராகன், கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியரும் மற்றும் திரு.க.துற்ஜெயந்தன் ,கிளிநொச்சி முக்கொம்பன் அ.த.க ஆசிரியரும் பங்குபற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.​

Related posts: