8,356 பேரைத் தெரிவுசெய்ய 1.5 கோடி பேர் வாக்களிப்பு!
 Friday, February 9th, 2018
        
                    Friday, February 9th, 2018
            
நாடு முழுவதும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8 ஆயுpரத்து 356 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான உள்@ராட்சி மன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை காலை 7 மணிமுதல் 4மணிவரை நடைபெறவுள்ளது 8ஆயிரத்து 356 பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய 57 ஆயிரத்து 256 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்
13ஆயிரத்து 420 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் தேர்தல் வாக்கெடுப்பை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் செயலகத்தால் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் காலை வேளையிலே வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்துவிட்டு வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் வழக்கு நடவடிக்கை காரணமாக எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தேர்தல் நடைபெறாது என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        