5473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
Tuesday, March 13th, 2018
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலைகளில் தரம் 6 க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த 5473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று கட்டங்களின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கான இந்த ஆசிரிய இடமாற்றம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் முதல் கட்டம் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றது.
ஆனால் கடந்த வருடத்தில் தரம் ஒன்றிற்கும், மூன்றிற்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவ...
காலநிலை மாற்றம் - கடல் மட்ட உயர்வினால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டேயர் நிலப்பரப்பை இலங...
யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு - எதிர்வர...
|
|
|


