2017ஆம் ஆண்டில் 3078 பேர் வாகன விபத்துக்களினால் பலி!
Saturday, January 20th, 2018
2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களினால் 289 சைக்கிளோட்டிகள் உயிரிழந்துள்ளதுடன் வீதி விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் ஒரு பங்குபாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளின் மரணங்களாக பதிவாகியுள்ளன.
இந்நிலையில் 3078 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்த நிலையில் அநேகமானோர் மோட்டார் சைக்கிளில் பயணித்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறான மரணங்கள் சம்பவிப்பதற்கு அதிவேகம் கவனயீனமாக வாகனங்களை முந்திச் செல்லல் வீதிப் போக்குவரத்து சமிக்ஞைகளைகவனிக்காமை கவனயீனம் போன்ற காரணிகளே என வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்
Related posts:
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!
எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!
இலங்கையை தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - இந்திய தூதரகம் விளக்கம்!
|
|
|
500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை - முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன - பிரா...
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன் - அமைச்சர் டிரான் அலஸ் உறுதி!
இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை - துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபா...


