1,000 தாதியருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து வெற்றிடம்!

Tuesday, November 7th, 2017

வடக்குமாகாணத்தில் ஒரேயொரு போதனா மருத்துவமனையாக விளங்குகின்ற யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் 49 பேருக்கும் தாதியர்கள் ஆயிரம் பேருக்கும் வெற்றிடம் நிலவும் நிலமையிலேயே மருத்துவப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என மருத்துவமனைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது;

குறிப்பாக 361 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 312 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மருத்துவமனையின் முழுமையான பணிக்கு ஆயிரத்து 400 தாதியர்கள் இருந்தால் மட்டுமே அந்தச் சேவையை முழுமையாக வழங்க முடியும் என்ற நிலையில் அந்தச் சேவையை 400 தாதியர்கள் மட்டுமே நிறைவு செய்கின்றனர். முடிந்தளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் மேலதிக நேர சேவையின் மூலம் பணிகனை நிவர்த்தி செய்கின்ற போதும் அதிக வேலைப்பளுவின் மத்தியிலேயே அவர்கள் பணியாற்றுகின்றனர்.

தாதியர் வெற்றிடம் என்பது நாடு முழுவதுமே பிரச்சினையான விடயமாகவே காணப்படுகின்ற போதும் குறித்த வெற்றிடம் எமது இடத்தில் அதிகமாகவே காணப்படுகின்றது – என்றார்.

Related posts:


மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் - பொது...
இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல...
நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது - யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட வி...