இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா : தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக அதிகரிக்க முடிவு!
Wednesday, April 8th, 2020
தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்க தேசிய கொவிட் -19 நடவடிக்கை நிலையம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றி இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டறிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறு 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நபர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் முன்னர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.
Related posts:
கலப்பு எரிபொருளில் இயங்கும் 750 பேருந்துகள் இறக்குமதி - போக்குவரத்து அமைச்சர்!
கடும் சூறாவழி - அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கடுமையாக பாதிப்பு!
கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவர் - பிரதமர் தி...
|
|
|
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கொள்கை மாறாது போராடி வரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வவுனி...
தயக்கம் காட்டும் கடற்படையினர் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை பு...
பூநகரியில் 1200 ஏக்கர் நிலத்தில் சூரிய மின்சாரத் திட்டம் – அணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் தி...


