வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர கலந்துரையாடல் !

Saturday, April 7th, 2018

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (08) காலை-09.30 மணிக்கு  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அண்மையிலுள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வேலைவாய்ப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கமும் பங்குபற்றவுள்ளது.

இந்தமாதம் இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வு, மற்றும் அதிலுள்ள பிரச்சினைகள், வேலையற்ற பட்டதாரிகளின் சரியான தரவுகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் அமையவுள்ளது.

எனவே மேற்படி கலந்துரையாடலில் அனைத்துப் பட்டதாரிகளும் தவறாது கலந்து கொள்வதுடன் சரியான முடிவுகளை எடுக்க ஒன்றிணைந்து செயற்படுமாறும் குறித்த  சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் – பிரதமர் மஹிந்த தெ...
பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் - போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – இலங்கை வெ...
கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரை...