வெள்ளவத்தை அனர்த்தம் குறித்து ஆராய விசேட குழு!
Saturday, May 20th, 2017
கொழும்பு – வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராய, வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த 5 மாடிக் கட்டடம் நேற்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், 20இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
மேற்படி அனர்த்தத்தில் படுகாயமடைந்த 27 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேலும் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து வருகின்றன.
Related posts:
அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது - ஈரான் அதிபர் !
வங்கி கடன்கன் வட்டிகளை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்த...
மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷ...
|
|
|


