வெளிநாட்டவர்கள் உயிரிழப்பது இலங்கையில் அதிகம் – நாடாளுமன்றில் தகவல்

Saturday, September 9th, 2017

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கு உயிரிழப்பது கடந்த மூன்று வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டில் 49 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இறந்துள்ளனர்.மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு 81 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் 87 வெளிநாட்டவர்கள் இலங்கை உயிரிழந்துள்ளதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

மக்களின் திசைதிருப்ப சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சா...
சிறுவர்களின் பாதுகாபப்பு கருதி கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகள் அனைத்து மாகாணங்களிலும் நிறுவப்பட...
அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் - அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ...