வீழ்ச்சியடையும் இலங்கையின் பங்குகள்!

Wednesday, May 10th, 2017

5.04 பில்லியன் டாலர்களாக இருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பத்திரங்கள் கடந்த மாதத்தில் 74 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் குறியீடுகள் தேரிவிகின்றன.

வெளிநாட்டு நாணய இருப்பு 4.07 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும்,தங்க நாணய இருப்புகள் 0.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. மார்ச் மாதத்தில் 233.32 பில்லியன் ரூபாய்களாக இருந்த மத்திய வங்கியின் கருவூலப் பங்குகள் ஏப்ரல் மாதத்தில் 295.34 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது.

இந்த வருடம் மே மாதம் வரை  ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு  1.5 வீதத்தால் குறைந்தது. மேலும் யூரோ 5.4 சதவிகிதம், ஜப்பானிய யென் 4.7 சதவிகிதம், இந்திய ரூபாய் 6.9 சதவிகிதம் என கடந்த ஆண்டில் ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்துள்ளது.

அதேவேளை , அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கியானது 2007 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பங்கு சந்தைகளில் இலங்கையின் பதினோரு பங்குகளை அமெரிக்க டொலரில்  தரநிர்ணயம் செய்துள்ளது .

Related posts: