விடுவிக்கபட்ட மாணவிகள்!

Wednesday, May 10th, 2017

நைஜிரியா உட்பட்ட  ஆபிரிக்க நாடுகளில் செயல் பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான Boko Haram போராளிகள் தாம் கடத்தி வைத்துருந்த 200 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளில் 82பேரை விடுதலை செய்துள்ளனர்.நைஜிரியாவின் வடகிழக்கு நகரமான Chibok ல் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மாணவிகளில் தற்போது விடுவிக்கப்பட்ட 82 பேரும்  கைதிகள் பரிமாற்று அடிப் படையிலேயே  விடுவிக்கப்பட்டதாக  நைஜிரிய அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நைஜீரியாவில் ஒரு இஸ்லாமிய கலீஃபாத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த ஏழு வருடமாக போராடிவரும் இந்த Boko Haram குழுவினரின்  பயங்கரவாத நடவடிக்கைகளால் இதுவரை 15,000 பேர் வரை கொல்லபட்டனர்  என்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும்  அதிபர் அலுவலக செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 பெண்கள் விடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுவிச்சர்லாந்து அரசு மற்றும் செஞ்சிலுவைச் சங்க  சர்வதேச குழு ஆகியோருக்கு நைஜீரியா, ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.

தலைநகர் அபுஜாவில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விடுவிக்கப்பட்ட இந்த பெண்களை பொறுப் பெற்றுக்கொண்ட அதிபர் முகம்மது புஹரி இந்த விடுதலைக்காக எத்தனை டீழமழ ர்யசயஅ தீவிர வாதிகள் விடுவிக்கப்பட்டர்கள் என்கின்ற விவரங்களை வெளியிட வில்லை.

கடத்தப்பட்ட அனைத்து பெண்களும்  விடுவிக்கப்பட்டு தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்படும் வரை அவதானமாக செயல் படுமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு  ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts:

வருமானம் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா – யாழ் அரச அதிபர்!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெ...
கல்வித் துறையில் அவசியமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - அமைச்...