விக்கி குறித்து அச்சம் தேவையில்லை – இராணுவ தளபதி!

Friday, July 7th, 2017

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கை குறித்து அச்சமடையத் தேவையில்லை என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறித்து செய்தியாளர் ஒருவர், கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய இராணுவத் தளபதி, வடமாகாண முதலமைச்சர் எனது சிறந்த நண்பர். அரசியல் நோக்கத்திற்காக படையினர் நிறுத்தப்படவில்லை. மாறாக தேவைகளின் அடிப்படையிலேயே படையினரை நிறுத்தும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினர் காணிகளை கைப்பற்றியிருந்தனர்.

தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது. எனினும், அத்தியாவசியமான முகாம்கள் தொடர்ந்தும் பேணப்படுகின்றது.

இந்நிலையில், சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் வசம் இருக்கும் காணிகள் விடுவிக்கப்படும்.

எவ்வாறாயினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts: