வாக்கு எண்ணுவது எப்படி என்பது தொடர்பில் மூன்று நாள் பயிற்சி!

Sunday, February 4th, 2018

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்@ர் அதிகார சபை தேர்தலில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வட்டார அடிப்படையில் நடைபெறவுள்ளது.

புதிய முறையின் கீழ் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள 243 வட்டாரங்களில் எவ்வாறு வாக்கெண்ணல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பிலான பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் பல்வேறு மட்டங்களில் யாழ்ப்பாண தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்தந்த வட்டாரங்களின் வாக்குகள் எண்ணப்படல் வேண்டும். எனவே ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முடிவடைந்ததும் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மத்திய நிலையத்திற்கு அனைத்துப் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மத்திய நிலையத்தில் வாக்கெண்ணல் பணிகள் இடம்பெறும்.

இதனை வாக்கெடுப்பு பணிக்குத் தலைமை தாங்கும் சிரேஸ்ட அலுவலரே மேற்கொள்வார் என்பதுடன் முடிவுகள் வட்டார ரீதியில் வெளியிடப்படும். தபால் மூல வாக்குகளும் வட்டாரத்திலேயே மேற்கொள்ளப்படும்.

இவ்வாக்கெண்ணல் நடவடிக்கைகள் தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வு 5 ஆம் திகதி, 6 ஆம் திகதிகளில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கும் 7 ஆம் திகதி வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 17 உள்@ராட்சி சபைகளுக்கான 243 வட்டாரத்திலுள்ள 521 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளதுடன் 243 நிலையங்களில் வாக்கெண்ணல் பணிகள் இடம்பெறவுள்ளன.

Related posts: