வரலாறு காணாத மழை: மடுமாதாவின் வருடாந்த திருவிழா பாதிப்பு!

Monday, August 14th, 2017

மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழாவினை வழக்கமான முறையில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

நாளை(15) தினம் கறித்த திருவிழா கொண்டாடப்பட இருந்த நிலையில் கறித்த பகுதியில் வரலாறு காணாத வகையில் பெய்திருக்கும் கடும் மழையே இதற்கு எகாரணம் என அருட்தந்தை தெரிவித்துள்ளார்.அன்னையின் திருவிழா தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் மடுத்திருப்பதியில் தங்கியிறுப்பதற்கு இன்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள நிலை ஏதுவாக இல்லை.அதனால் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் தலைமையில் குருக்கள் கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.

வழிபாட்டு நேரங்களில் மக்கள் தங்கியிருக்கின்ற போட்டிக்கோ பகுதிகளும்இ அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் மழை நீரில் மூழ்கியுள்ளன.எனவே வழக்கமான வழிபாடுகள் மேற்கொள்ளுவது சாத்தியமற்றது.வானிலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு நாளைய நாள் திருப்பலி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

மடு அன்னையின் வருடாந்த ஆவனித்திருவிழா விண்னேற்பு திருவிழாவாக திருத்தலத்தில் கொண்டாப்படுகின்றமை வழமையாகும்இந்நிலையில் நீண்ட வறட்சியின் பின்னர் பெய்திருக்கும் கடும் மழையினால் திருவிழாத்திருப்பலிக்கான வழிபாடுகளிலும் மக்களின் இருப்பிடத்திலும் தடங்கள் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று(14) மாலை நேர வெஸ்பர் ஆராதணைகள்  நிறைவடைந்து அன்னையின் திரூச்சொரூப ஆசீர்வாதமும் இடைம்பெற்றிருக்கின்றது.

Related posts: