வடமாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவடையவுள்ளது -றெஜினோல்ட் குரே

Thursday, June 22nd, 2017

வடமாகாணத்தில் ஜனநாயக மேடை விளையாட்டு நிறைவடைந்திருப்பதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடமாகாண சபையின் ஆயுள் காலம் நிறைவடைய உள்ள நிலையில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மாகாண சபை உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

வடமாகாண விவசாய மற்றும் கல்வி ஆகிய அமைச்சு துறைகளை பொறுப்பேற்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இதன் நிறைவில் ஊடகங்களுக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், வடமாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்படி கேட்டிருக்கின்றேன். மேலும் வடமாகாண ஜனநாயக விளையாட்டு நிறைவடைந்திருக்கின்றது. இந்த விடயத்தை நான் மிக உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கிறேன்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜனநாயகத்தின்படி இந்த விடயத்தில் அநாவசிய தலையீடுகளை நான் செய்திருக்கவில்லை.தேசியளவில் உள்ள பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வழியில் தீர்வுகள் காணப்பட வேண்டும். இந்த விடயம் ஜனநாயக வழியில் தீர்க்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.

Related posts: