வடமாகாண அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – வடமாகாண ஆளுநர்

Sunday, January 7th, 2018

மத்திய அரசாங்கத்தினால், வடமாகாண அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில்  முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரிட்டன் பாராளுமன்ற குழுவினருக்கு எடுத்துரைத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின்  அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டு, ; வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று  (06) நண்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் உட்பட வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவ கட்டமைப்புக்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

அதேவேளை, மக்களின் ஜனநாயக உரிமைகள், காணாமல் போனோரின் விபரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.

வடமாகாணத்தில் எவ்வளவு எண்ணிக்கையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் விசேடமாக வடமாகாணத்தில் கல்வி, சுகாதாரம், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

அதேவேளை, அபிவிருத்திச் செயற்பாடுகள், மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போதும், மத நிகழ்வுகளின் போது, இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், வடமாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் 15 ஆயிரம் மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானிய அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் அபாயம் -கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள...
எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
நாடாளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க நடவடிக்கை - ஜனவரி முதல் நடைமுறையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹி...