வடக்கிலும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர் – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே!

Saturday, November 25th, 2017

வடக்கில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும். கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கைக் கூட இன்னமும் நிர்மாணித்து முடிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கல்வி அமைச்சர் அதிகாரிகளினதும் இராஜாங்க அமைச்சரினதும் ஆலோசனைகளைக் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அகிலவிராஜ் காரியவசம் தலைவராக வேண்டுமாயின் அனைவரினதும் ஆலோசனையையும் கேட்க வேண்டும். கல்வி அமைச்சரே நீங்கள் தலைமை அமைச்சராக வேண்டாம்.

தற்போது கிரிக்கெற் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மதத்துக்குப் பின்னால் பற்று வைத்தது கிரிக்கெட் மீதாகும். தற்போது கிரிக்கெட்டைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகும். இது தொடர்பில் சிறப்பு அவதானம் செலுத்த வேண்டும்.

கிளிநொச்சி விளையாட்டரங்கை நான் நீக்கியதாக குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் திறமையான வீரர்கள் உள்ளனர். தற்போது கிளிநொச்சி விளையாட்டரங்கை இன்னும் நிர்மாணிக்கவில்லை. இந்த விளையாட்டரங்கை நிர்மாணிக்க துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

Related posts: