யுத்த இழப்பீட்டு சட்ட மூலத்திற்கு 2/3 அல்லது சர்வஜன வாக்கெடுப்பு – தேவை என உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Thursday, August 9th, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலக சட்டமூலத்தின் சில விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவ்வாறு இல்லையென்றால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் அனுமதியை பெறவேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

அரசியல் அமைப்பின் 121 (1) க்கு அமைய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டை வழங்கும் அலுவலகம் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சட்டமூலத்தின் 27 (அ) மற்றும் 27 (ஆ) 3 ஆகிய சரத்துகள் அரசியல் அமைப்பை நிறைவேற்ற வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு குறையாது நிறைவேற்ற வேண்டும் 5க்கு அமைய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டை வழங்கும் அலுவலகம் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் சட்டமூலத்தின் 27 (அ) மற்றும் 27 (ஆ) 3 ஆகிய சரத்துகள் அரசியல் அமைப்பை நிறைவேற்ற வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு குறையாது நிறைவேற்ற வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையென்றால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் நிலைப்பாட்டை பெறவேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்து அரசியல் அமைப்பிற்கு உட்பட்டதாக மாற்றியமைத்தால் அதனை நிறைவேற்ற முடியும். அதேபோல் சட்ட மூலத்தில் ஏனைய விதிமுறைகள் சட்டமூலத்துக்கு முரணானது அல்ல எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: