யாழ்ப்பாண மாவட்டத்தில் 53 குளங்கள் அழிவு : பாதுகாக்க உள்ளுராட்சி மன்றங்கள் முன்வர வேண்டும் – புவியியல்துறை விரிவுரையாளர்!

Friday, July 27th, 2018

யாழ் மாவட்டத்தில் 53 குளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் முன்வர வேண்டுமெனவும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பிரதீபராஜா தெரிவித்தார்.

எமது முன்னோர்கள் நிலத்தடி நீரின் தேவை கருதி குளங்களையும் கேணிகளையும் அமைத்து பராமரித்து வந்தனர். இதனாலேயே இன்றுள்ள நாம் அதன் பயனை அனுபவித்து வருகின்றோம். இவ்வாறான நிலையில் குளங்களையும் கேணிகளையும் அழிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

குளங்கள், கேணிகள் அழிக்கப்படும்போது நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியாது போய்விடும். இதனால் நீர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும்.

எனவே நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் நீரைச் சேமிக்கவும் குளங்களையும் கேணிகளையும் அழிவிலிருந்து பாதுகாக்க உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், தவிசாளர்கள், பொது அமைப்புகள், சமூக முக்கியஸ்தர்கள் முன்வர வேண்டும். இல்லாவிடில் இன்னும் சொற்ப காலத்தில் நீர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Related posts: