மோதல்களை தவிர்க்குமா அமைச்சரவை மாற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி மந்திரி ரவி கருணாநாயக்க ஆகியோருக் கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம் பெறவுள்ளதாக கொழும்பு செய்திகள் தேரிவிகின்றன வெசாக் கொண்டாட்ங்க்களில் கலந்து கொள்ள நாளை ஜனாதிபதி பொலன்னறுவை செள்ளவுள்ளதா கவும் அங்கு வைத்தே இந்த சந்திப்பு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த செய்திகள் தெரவித்தன.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் குறிப்பாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மாற்றப்படுவார் அவரை பதவி மாற்றுமாறு ஸ்ரீ.ல.சு.கட்சியினர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகுன்றனர் என செய்திகள் வெளியாகிய நிலையிலேயே இந்தச் சந்திப்பு நடை பெரும் என தேரிவிகப்பட்டுளது.வணிக உலகத்துடன் இணைந்த வணிக உலகத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரே நிதி மந்திரியாக இருக்க வேண்டும் என்று ஜனதிபதியும் விரும்புவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்றைய நிலையில் அமைச்சரவை மாற்றம் நாட்டின் நன்மைக்கு தேவையான ஒன்று எனவும் அதற்க்கு பிரதம மந்திரி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கி இருபதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று கருது தெரிவித்திருந்தும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரவி கருணாநாயக்கவுக்கு அதற்கான தகுதி இருப்பதாலேயே அவர் அவர் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என ஐ.தே.க. வட்டரங்கள் தெரிவித்துள்ளன.
அரசை வெற்றிகரமாக நடத்துவதற்கான நவல்லமை வாய்ந்தவர்களே அமைச்சர்களாக நியமிக்கப் படவேண்டும் என .ஜனாதிபதி விரும்புவதகவும் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் கூட அமைச்சரவையை மாற்றுவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப் படுகிறது. ஆனால் இந்த அதிகாரிகள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுப்பது மற்றும் அரசுக் கிடையே தோன்றியுள்ள மோதல்களைக் குறைத்தல் என்பதாகும், ஆனால் இப்போது புதிய மோதல்கள் ஏற்படலாம் என்று தோன்றுகிறது. அது நடந்தால், அது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முழு அரசாங்கத்துக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கப் போகிறது.
Related posts:
|
|