மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம்?

Monday, August 28th, 2017

கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை நேரடியாக மேல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இப்படியான வழக்குகள் மேல் நீதிமன்றத்திடம் கையளிக்க வேண்டிய அவசியமில்லையென சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் இந்த மாற்றம் மேற்கொண்டதன் பின்னர், சட்டமா அதிபரினால் நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்.

இது தொடர்பான வரையறை மாற்றம் தற்போது சட்டமா அதிபரின் வல்லுனர்களினால் மேற்கொள்ளப்படுவதாக கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் இயக்குனர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

நிலைமை எவ்வாறு இமையும் என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் - அரச மருத்துவ ...
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை - நோய் ஆய்வு பிரிவின் பிரதானி சு...
கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டம் - ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!