மேய்ச்சல் தரவைக்கு அடையாளப்படுத்தப்படும் இடம் பொருத்தப்பாடற்றதாக அமைகின்றது – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!

Saturday, June 2nd, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைப்பதில் இருக்கின்ற இடர்பாடுகள் காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அமைக்கப்படாமையினால் பண்ணையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இந்நிலையில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் தொடர்பில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அமைப்பதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் அரசாங்க அதிபர் தலைமையில் 1100 ஏக்கர் மேய்ச்சல் தரவை இனங்காணப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், உடையார்கட்டு போன்ற இடங்களில் மேய்ச்சல் தரவைகள் இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட போதும் வனவளத் திணைக்களத்தினால் அது பொருத்தப்பாடற்ற இடமாகக் காட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள குமுழமுனைப் பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பகுதி அடையாளம் காணப்பட்டபோதும் இவற்றை அமைப்பதற்கான சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அனுமதிகளை வழங்காமையினால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அமைக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...
25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் சக்தி - அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் ஆரம்பம் என நகர அபிவிருத...
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கம் - அந்த நாட்டு ஜனாதிபதி வோலோட...

அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது - பிரதமர் மஹிந்த ராஜப...
இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு - இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை பலப்படுத்து...