முல்லைத்தீவில் 1,958 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி!

Thursday, January 11th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளின் தேர்தலின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஆயிரத்து 958 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

எதிர்வரும் உள்ளூராட்சிசபைகளின் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்புகள் எதிர்வரும் 22, 25, 26 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட தபால் மூலம் வாக்களிப்பு ஆவணங்கள் ஐந்து நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வாக்களிப்பு ஆவணங்கள் பொதியிடப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை தபால் நிலையங்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு அடங்கிய பொதிகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒப்படைக்கப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் வாக்களிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 25, 26 ஆகிய இரு தினங்களிலும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்துச்சபையின் உத்தியோகத்தர்கள் ஏனைய அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் படைப்பரிரிவுகளின் படைவீரர்கள் ஆகியோர் வாக்களிக்கவுள்ளனர்.

இந்நிலையில் 22, 25, 26 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிக்கத் தவறிய அனைத்துப்பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் பெப்ரவரிமாதம் 01, 02 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்குச் சென்று வாக்களிக்கமுடியும்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட மாந்தை கிழக்கு பிரதேசசபையின் கீழ் 96 வாக்காளர்களும் துணுக்காய் பிரதேசசபையின் கீழ் 166 வாக்காளர்களும் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் கீழ் 777 வாக்காளர்களும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் கீழ் 919 வாக்காளர்களும் மொத்தம் 1,958 வாக்காளர்கள் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பு செய்வதற்காக தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு  மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம...
பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக...
வெப்பமான காலநிலை - பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண...