முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ஐ.நாவில் ஜனாதிபதி அழைப்பு !

Wednesday, September 20th, 2017

இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.நாட்டை பிரித்தாள முற்பட்ட விடுதலைப் புலிகளை தோற்கடித்து தற்போது நாடு சமாதானத்தை நோக்கி முன்னேறுகிறது.

பொருளாதாரம், சமுகம் கைத்தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேறுகிறது.அதேநேரம் மறுசீரமைப்பு செயற்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்களின் அமுலாக்கங்கள் தொடர்பில் இலங்கை அர்ப்பணிப்புடன் இருக்கிறது.இந்தவிடயங்களில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அதேநேரம், அடிப்படைவாதிகள் குறுங்காலத் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர்.ஆனால் குறுங்காலத் தீர்வுகள் எப்போதும் வெற்றியளிக்காதன.

எனவே நிலையானதும், வெற்றிகரமானதுமான இலங்கையின் பயணத்துக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கட்டாயமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மறுசீரமைப்பு உயர்பீட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்தி சம்மேளனத்தில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இந்த நிகழ்வில், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts: