முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடூழிய சிறை!
Friday, September 8th, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளராக பணியாற்றிய லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையுடன், தலா 20 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இது தொடர்பான தீர்ப்பை சற்று முன்னர் அறிவித்தார்.மேலும் இருவரும் தலா 50 மில்லியன் ரூபா பணத்தை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
வழமைக்கு திரும்புகிறது அனைத்து பாடசாலைகளிலும் வகுப்புக்கான கால நேரம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை - தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!
இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்...
|
|
|


