மீண்டும் ஒரு பாடசாலை மாணவி மாயம்!
Saturday, September 9th, 2017
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது – 14) என்ற பாடசாலை மாணவி கடந்த 06 அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டதன் பின்னர் வீட்டின் அறையில் உறங்கியுள்ளார்.
நேற்றைய தினம் அதிகாலை அவரது பெற்றோர் பாடசாலைக்கு செல்வதற்கு எழும்புமாறு அறைக்கு சென்ற போது குறித்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசு – எச்சரிக்கிறார் ஜீ.எல்.பீரிஸ்!
சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!
அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் கலாநிதி விஜயதாஸவினால் அம...
|
|
|


