மார்ச் வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்!

எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஜப்பானில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானின் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 700 க்கும் மேற்பட்டோர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் அடையாளம் காணப்பட்டனர்.
ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் துருக்கி!
எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் முன்வாருங்கள் - செல்வந்த ந...
|
|