மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 157 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவர் என்று, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்படி 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட மாட்டார்களென, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
சரத் பொன்சேகா எடுத்த அதிரடி முடிவு?
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது - எதிர்காலத்தில் அவ்வாறு ச...
|
|